செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்து சமய அறநிலைத்துறையில் வருகின்ற திருக்கோயில்களுடைய உண்டியல் பணம் மற்றும் திருக்கோயிலைச் சார்ந்த இடங்களில் வருகின்ற வருவாய்க்கு அப்பாற்பட்டு இதுபோன்று அரசின் சார்பிலும் அதிகமான மானியம் வழங்கிய ஆட்சி, கடந்த காலங்களில் ஒப்பிட்டு பார்த்தால் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களுடைய தலைமையில் நடைபெறுகின்ற.

இந்த ஆட்சியில் தான் மானியங்கள் அதிகமாக இந்து சமய அறநிலைத் துறைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 200 உலோக திருமேனிகள் சிலைகள் இதுவரையில் இந்த ஆட்சி ஏற்பட்ட நாளில் மே 7ஆம் தேதி 2021 ஆரம்பிக்கப்பட்டு  200 உலோக திருமேனி சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. நூறு கற் சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன.

திருக்கோயிலைச் சார்ந்த கலைப் பொருள்கள் 100 மீட்கப்பட்ருடிக்கின்றன. மொத்தம் 400 கலைப் பொருட்கள் மீட்கப்பட்டது உண்டான பட்டியலை ஊடகங்களுக்கு அளிக்கின்றோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் இத்தனை மீட்கப்பட்டிருக்கின்றன. ஒருபுறம் காணாமல் போன சிலைகளை மீட்பது ஒரு புறம்…  அதேபோல் மேலும் களவு நடக்காமல் தடுக்கப்பட வேண்டும், என்பதற்காக அனைத்து முதல்நிலைக் கோவில்களிலும் அபாய மணி பொருத்தப்பட்டு இருக்கின்றது.

அதேபோல் உலோக திருமேனி அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. நான் ஏற்கனவே கூறியது போல் 1777 உலோக திருமேனி அறைகள் 182 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 250 உலோக திருமேனி சிலைகள் அறைகள் இதுவரையில் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே காணாமல் போன சிலைகள் மீட்டெடுப்பது ஒரு புறம்…  மேலும் களவு போகாமல் இருப்பதற்கு உண்டான நடவடிக்கை எடுப்பது மறுபுறம் என்று இந்த அரசு…. இந்து சமய அறநிலைத்துறை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மீட்கப்பட்ட பொருட்களினுடைய பட்டியல்… அடையாளம் காணப்பட்டு இருக்கின்ற மேலை நாடுகளில் இருக்கின்ற சிலைகளில் பட்டியலை ஊடகத்துக்கு அளிக்கின்றோம் என தெரிவித்தார்.