தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில் அவர் கூறியதாவது, பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படத்தில் முல்லை பெரியார் அணைக்குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றுள்ளது. படத்திற்கும் அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான வசனங்களை பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. இரண்டு ஷட்டரை திறந்தாலே, முல்லைப் பெரியாறு அணையை குண்டு வைத்து தகர்த்தால் மீண்டும் கேரளா தண்ணீருக்குள் மூழ்கும்.

அணையை காப்பாற்ற செக் டேம் என்ற சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருப்பதுதான் சரி போன்ற வசனங்கள் அப்படத்தில் இடம் பெற்றுள்ளன. இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ்நாடு- கேரள மாநில மக்களிடையே நீடித்து வரும் நல்ல உறவை சீர்குலைத்து கெடுக்கின்றது. எனவே எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு குறித்து இடம்பெற்றுள்ள அவதூறான கருத்துக்களை நீக்க வேண்டும். தொடர்ந்து தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தி வரும் போக்கை மலையாளத் திரை உலகம் கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.