சென்னை கொரட்டூர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது குடும்பத்தோடு தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் ஊருக்கு திரும்புவதற்காக திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு பயணித்தார். அப்போது அவர் ஏறிய ரயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது.

அதன்பின் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்ட நிலையில் பால சரஸ்வதி பயணித்து வந்த பெட்டியில் 30 வயது இளைஞர் ஒருவர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கத் தாலி செயினை பறித்துக் கொண்டு ஓடும் ரயிலிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து பாலசரஸ்வதி அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது