செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, தமிழகத்தில் பாலியல் ரீதியான அச்சுறுத்தலுக்கும்,  பாலியல் ரீதியான தாக்குதலுக்கும் பணம் என்ற பெயரால்… ஜாதி என்ற பெயரால்… மதம் என்ற பெயரால்…  அதிகாரம் என்கிற பெயரால்…  குற்றவாளிகள்   தப்பிக்க கூடாது என்ற காரணத்திற்காகவும்,  சகோதரி விஜயலட்சுமி அவர்களுக்கு நியாயமும்,  நீதியும் கிடைக்க வேண்டும் என்று சகோதரி அவர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்டதன் பேரில்,

அவங்களுக்கு தொடர்ச்சியாக தமிழர்  முன்னேற்ற படை சார்பாக நாங்கள் ஆதரவு தெரிவிச்சு,  அவங்களுக்காக தமிழகம் முழுவதும்…. தமிழக மக்கள் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வரப்போகுது என்று எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் காவல்துறையில் இருக்கக்கூடிய சில அதிகாரிகள்…

விஜயலட்சுமி அவர்களுக்கு தவறாக சில தவறான வழிகாட்டல் கொடுத்து, அவர்களை செயல்படுத்துறாங்க என்ற குற்றச்சாட்டை நான் முன் வைக்கின்றேன். ஏன்னு கேட்டீங்கன்னா…  இன்னைக்கு தமிழகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி அவர்கள் கொடுத்த புகாருக்கு தமிழக மக்கள் எதிர்பார்த்துட்டு இருக்காங்க. ஏன்னா அதிகாரத்தில் இருக்கக்கூடிய அரசியல் பின்புலத்தில் இருக்கக்கூடிய…

ஒரு நபர் பாலியல் ரீதியான அச்சுறுத்தலையும்,  தாக்குதலையும் ஒரு பெண் மீது செலுத்தி…  அந்த குற்றவாளி தமிழ் மண்ணில் தப்பிக்க கூடாது என்பதற்காக….  இது முன் உதாரணமாக அமையக்கூடாது என்பதற்காக…  நம்ம தமிழக மக்கள் எல்லாரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து,  நாங்க எல்லாரும் களத்தில் நிற்கிறோம் என தெரிவித்தார்.