வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னதாகவே ஹிட்டடித்த பாடல்கள் இன்னும் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றது.

இந்நிலையில் கர்ப்பிணி ஒருவர் தன் வயிற்றில் உள்ள குழந்தை ரஞ்சிதமே பாடல் கேட்டு தான் முதன் முதலில் அசைவு கொடுத்ததாகவும் தற்போது அந்த பாடலை எப்போது கேட்டாலும் குழந்தை ஆடுவதாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

வயிற்றிலேயே தன் குழந்தை விஜய் ஃபேனாக மாறிவிட்டதாக கூறிய அவர் வாரிசு ஒரு எமோஷனலான படம் என்றும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.