
டெல்லியில் பஞ்சாபி பாக் பகுதியில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி அன்று சாந்தி என்ற பெண் தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் தனது பகைவரான வில்லு என்ற சாத்நாம் வீட்டிற்கு சமாதானம் பேச சென்றுள்ளார். ஆனால் வில்லு மற்றும் அவரது குடும்பத்தினரும், சாந்தி மற்றும் அவரது மகன்களையும் அடித்து துரத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது சாந்தியின் மகனான அர்ஜுன், தான் எடுத்து வந்த துப்பாக்கியை எடுத்து வில்லுவின் அருகில் நின்று கொண்டிருந்த ரித்விக் என்பவரை நோக்கி சுட்டார். ஆனால் ரித்விக் தனது டவுசர் கைக்குள் வைத்திருந்த செல்போன் மீது குண்டு பாய்ந்து. குண்டு பாய்ந்த உடன் செல்போன் சுக்குநூறாக தெரிவித்தது.
இதனால் ரித்விக்கின் உடலில் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.