
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் வாழவல்லான் கொற்கை ரோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 2 நபர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.
அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (45), மாநாடு தைக்காவூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (35) ஆகியோர்.
இது குறித்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பிரீத்தா அமர்வின் கீழ் நேற்று வந்தது. அந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் தலா ரூபாய் 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
மேலும் இவ்வழக்கை சிறப்பாக விசாரணை செய்த அப்போதைய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணையிக்கு உதவியாக இருந்த ஏட்டு முருகன் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பாராட்டியுள்ளார்.