
சேலம் மாவட்டத்தில் உள்ள இடைப்பாடி ஆலச்சம்பாளையத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இளம் வயதிலேயே தமிழ் செல்வனின் தாய் இறந்துவிட்டார். தந்தையும் மதுவுக்கு அடிமையாகி விட்டார். இதனால் தமிழ்செல்வன் உள்ளூரில் இருக்கும் டீக்கடையில் வேலை பார்த்துள்ளார். இதனை அடுத்து தனக்கு 13 வயது இருக்கும் போது தமிழ்ச்செல்வன் சென்னைக்கு வந்து பழக்கடையில் வேலை பார்த்தார். கடந்த 1995 ஆம் ஆண்டு தள்ளுவண்டி கடையில் பிரியாணி விற்பனை செய்தார். இப்போது தமிழ்ச்செல்வன் சொந்தமாக பிரியாணி கடை வைத்துள்ளார். இவர் 23 கிளைகள் இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் கொண்டு வந்த பாம்பை வாங்கி தமிழ்ச்செல்வன் தனது கையில் வைத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து மற்றவர்கள் 10-க்கு மேற்பட்ட பாம்புகளை காட்டியுள்ளனர். அந்த பாம்புகளையும் தமிழ்ச்செல்வன் கழுத்தில் வைத்துக் கொண்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த மேட்டூர் வனத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு தமிழ்செல்வனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் மீது வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.