தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் அசின். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அசின் அதன் பிறகு பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து  முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக ஜொலித்த அசின் கடந்த 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஆரின் என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட நடிகை அசினின் மகள் புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அச்சு அசல் அசினை போன்றே அவருடைய மகள் இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.