டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டடித்த திரைப்படம் “புஷ்பா”. இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரிலீஸ் ஆகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

இப்போது இந்த படத்தின் 2-ஆம் பாகமான “புஷ்பா-தி ரூல்” படத்தின் சூட்டிங் கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. அண்மையில் இந்த படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புஷ்பாவாக மாறிய புகைப்படத்தை தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதன்படி, டேவிட் வார்னர் புஷ்பா -2 படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் இருக்கும் அல்லு அர்ஜுன் புகைப்படத்திற்கு பதில் தனது புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார். இப்பதிவை தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். டேவிட் வார்னர் தன் இணையப்பக்கத்தில் அடிக்கடி பல போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

 

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)