பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் சைப் அலிகான். கடந்த வாரம் இவர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் புகுந்து அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அதன் பின் அவர் ஆட்டோவில் தனது மகனுடன் மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவர் தற்போது வீடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆட்டோ டிரைவருக்கு 11 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் காவல்துறையினரின் விசாரணை போது ஆட்டோ டிரைவரையும் வரவழைத்து வாக்குமூலம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.