நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தலைவர் அவர்களே….  பாரத தாயின் மீது இவர்களுக்கு என்ன அன்பு இருக்கிறது ? பாரத மக்கள் மீது இவர்களுக்கு என்ன அன்பு இருக்கிறது ? ஒரு உண்மையை இப்போது துக்கத்தோடு சொல்ல விரும்புகிறேன். இந்த துன்பத்தை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். நான் கிராமம் கிராமமாக சுற்றி வந்தவன். நான் அரசியலில் இல்லாத போது அங்கெல்லாம் சென்று இருக்கிறேன். உணர்வு பூர்வமான தொடர்பு எனக்கு இருக்கிறது. இவர்களுக்கு அதெல்லாம் புரியாது.

முதலாவது சம்பவம்:

சபாநாயகர் அவர்களே….  நான் மூன்று விஷயங்களை உங்களுக்கு முன்னால் வைக்க விரும்புகிறேன். மிகுந்த வலியோடு இதை நான் சொல்லுகிறேன். நாட்டு மக்களும் இதை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதலாவது சம்பவம் மார்ச் 5இல் 1966. அந்த நாளில் மிசோரமில் நிராகதியாக நின்ற மக்கள் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

ஆண்டுதோறும் மார்ச் 5:

மிசோரம் மக்கள் வேற்றுநாட்டவர்களா ? இந்த நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவா ? அல்லது தாக்குதல் நடத்தியது வேறு நாட்டு விமானங்களா ? மார்ச் 5இல் 1966 ஆம் நாள் விமானபடை  மூலம் மிசோராமில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் ஒவ்வொரு வருடமும் மிசோரமில் மார்ச் 5க்கு துக்கம் அனுசரிக்கின்றார்கள். அந்த வலியை மிசோரம் மறக்கவில்லை.

இந்திராகாந்தி: 

ஒரு நாளும் அதை தீர்ப்பதற்கு…. அந்த காயத்திற்கு மருந்து தரும் முயற்சியை இவர்கள் எடுக்கவில்லை. அதனால் இவர்களுக்கு துக்கம் ஏற்படவில்லை. ஆனால் காங்கிரஸ் இந்த உண்மையை நாட்டு மக்களுக்கு முன்னால் மறைத்திருக்கிறது. நம்முடைய நாட்டிலேயே…  நாட்டு மக்கள் மீதே…  விமானப்படை மூலம் தாக்குதலா ? இதை செய்தவர் இந்திரா காந்தி.

இரண்டாவது சம்பவம்:

அகல் தகாத் மீது தாக்குதல் நடந்தது நமக்கு எல்லாருக்கும் தெரியும். அதற்கான பயிற்சி முன்னாலே மிசோராமில் நடந்துவிட்டது. மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே…. அந்த மக்களின் நம்பிக்கையை இவர்கள் கொன்றுவிட்டார்கள். நான் இரண்டாவது சம்பவத்தை பற்றி சொல்ல விரும்புகிறேன். அந்த சம்பவம் 1962 ஆம் ஆண்டு நடந்தது. வானொலி மூலம் அன்றைய தினம் மேற்கொண்ட பிரச்சாரம் வடகிழக்கு மக்களை மிகவும் துன்பத்துக்கு உள்ளாக்கியது.

நேரு:

நேரு அவர்கள் நாட்டின் மீது சீனாவின் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும்போது..  இந்தியாவிலிருந்து தங்களுக்கு உதவி கிடைக்கும் என்று அவர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும்போது… அந்த நேரத்தில் டெல்லியில் ஆட்சியில் அமர்ந்திருந்த ஒரே தலைவராக கருதப்பட்ட பண்டிட் நேரு அவர்கள் ரேடியோவில் சொல்கிறார்…

ஊசி:

என்னுடைய இதயம் அசாம் மக்களுடன் செல்கிறது என்று அவர் சொன்னார். அந்தப் பிரச்சாரம் இன்றும் அசாம் மக்களுக்கு ஒரு ஊசியைப் போல குத்துகின்றது. அசாம் மக்களை தங்களின் அதிர்ஷ்டத்தின் கையில் ஒப்படைத்து விட்டு இவ்வாறு பேச பண்டித நேருவால்  எப்படி முடிந்தது என்று தெரியவில்லை?  இப்போது இங்கே இருந்த லோகியவாதிகள் வெளியே சென்று விட்டார்கள். அவர்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன்.

30,000 சதுர கிலோமீட்டர்:

லோகியாவின் வாரிசுகளாக சொல்கிற இந்த நபர்கள்…  இங்கே நேற்று குரல் எடுத்து சபையில் பேசிக் கொண்டிருந்தவர்கள்… நீட்டி முழக்கி பேசியவர்கள்…  லோகியா நேருவின் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்தார். வேண்டுமென்றே நேரு வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார் என்று அவர் சொன்னார். அப்போது லோகியா அவர்கள் நேருவை பற்றி  சொன்னார்… இது எத்தனை அபாயகரமானது என்று தெரியுமா ?  30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஒரு கோல்ட் ஸ்டோரேஜ் இல் வைத்து… அதை எந்த வளர்ச்சியும் அடையாமல் பாதுகாத்து வருகிறார் என்று லோகியா நேருவைப் பற்றி சொன்னார் என தெரிவித்தார்.