தஞ்சாவூர் பகுதியில் ஒரு குப்பை தொட்டியில் அரசால் வழங்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்து என்பது கொட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூரில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள்,  குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய அயன் அண்ட் போலிக் ஆசிட் என்ற டானிக் கடந்த மாதத்தோடு முடிவடைந்த நிலையில்,

காலாவதியான டானிக் பாட்டில்கள் 200க்கும் மேற்பட்டவை தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சேகர் காலணி அருகே உள்ள குப்பை தொட்டியில் கொட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்பதற்க்காக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள்,  மற்றும் கர்ப்பிணில பெண்களுக்கு வழங்குவதாக போலிக்  ஆசிட் சிரப்  வழங்கப்பட்டு வருகிறது.

இது அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், கடந்த மாதத்தோடு காலாவதியான 200 பாட்டல்கள் குப்பை தொட்டியில் கொட்டி கிடக்கின்றது  பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த சிரப் மருந்துகள் குழந்தைகளுக்கும்,  பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அப்படி தேவையில்லை என்றால் அருகில் தேவைப்படக்கூடிய மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் கலவாதியாகிவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சத்து டானிக் கொட்டி கிடப்பது பேசு பொருளாகி உள்ளது.

இதை யார் கொட்டினார்கள் ? என்பது குறித்து கேள்வியும் எழுதுகிறது. அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இவ்வளவு டானிக் பாட்டில்கள் இந்த பகுதிக்கு எப்படி வந்தது ? தனிநபர் எப்படி வந்து கொட்டினார் ? என்ற கேள்வி எல்லாம் வந்துள்ளது.