லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2-வது முறையாக விஜய் நடிக்கும் படம் தளபதி 67. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் சூட்டிங் நடந்துகொண்டிருக்கும் நிலையில், படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இயக்குனர் மிஸ்கின், தளபதி 67 படம் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். அதாவது, இப்படத்தில் இடம்பெறும் சண்டைகாட்சி ஒன்றில் விஜய்க்கும் மிஸ்கினுக்கும் செம மோதல் இருக்கிறதாம். இவற்றில் இடம்பெறும் காட்சியில் தனது வாய்யை விஜய் அடித்து கொளப்பி விட்டதாகவும், முகம் முழுவதும் ரத்தம் எனவும் மிஸ்கின் கூறி உள்ளார். மேலும் லோகேஷ் சிறப்பாக காட்சிகளை படமாக்குகிறார் எனவும் பாராட்டி பேசி உள்ளார்.