
வாரிசு திரைப்படத்தை அடுத்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி-67 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் தொடங்கியது. தளபதி 67 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியது. அந்த வகையில் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார். அதன்பின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத் தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்தனர். மேலும் ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகிறார்.

நடன இயக்குனராக தினேஷ் இணைந்து உள்ளார். 2ஆம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்று உள்ளனர். இந்த நிலையில் தளபதி-67 திரைப்படத்தில் நடிக்கவுள்ள பிரபலங்களின் பெயரை தயாரிப்பு நிறுவனமானது வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி (நடிகராக அறிமுகமாகிறார்), மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் போன்றோர் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தளபதி-67 அப்டேட் தொடரும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
And Finally ACTION KING @akarjunofficial on board 🔥#Thalapathy67 pic.twitter.com/UdjVJx2l0f
— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023