மாதவரம் பொன்னியம்மன்மேடு விபிசி நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் கலை செல்வன்(29). இவர் அதே பகுதியில் வசித்து வரக்கூடிய நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அதில் ரூ.52 ஆயிரத்தை திருப்பி கொடுத்த கலை செல்வன் மீதி பணத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் பணம் குறித்து நேற்றிரவு கலைசெல்வனின் வீட்டிற்கு சென்று நித்யா கேட்டார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி இருதரப்பினரும் மாதவரம் போலீசில் புகாரளித்தனர். இதனால் இன்ஸ்பெக்டர் சிவகுமார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.