மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில், மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காலையில் தனது டீக்கடையைத் திறக்கச் சென்ற ஒரு சாமானியருக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்பது இந்த ஆட்சியில் மிகப்பெரிய வெட்கக்கேடு.

போதையில் இருந்த நபர்களைத் தட்டிக்கேட்டதற்காகத் தலை துண்டித்துக் கொலை செய்யும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது?

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் துப்பு இல்லாத ஒரு ‘கையாலாகாத பொம்மை முதல்வர்’ ஸ்டாலின் தலைமையில் விடியா திமுக ஆட்சி நடப்பதால்தான் குற்றவாளிகளுக்குப் பயம் இல்லை.

தமிழக மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், இந்த விடியா திமுக அரசை அடியோடு வீழ்த்துவதே ஒரே வழி.