
உத்தரப்பிரதேசத்தில் திருப்பதி லட்டு விவகாரத்தைத் தொடர்ந்து, சில முக்கிய கோயில்களில் பக்தர்கள் இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை பிரசாதமாக கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் உள்ள அலோபி சங்கரி தேவி கோயிலும், அனுமன் கோயிலும் இந்த தடை விதிப்பை அறிவித்துள்ளன. இந்த கோயில்களில் பக்தர்களுக்கு தேங்காய், பழங்கள் மற்றும் உலர் பழங்களை மட்டுமே பிரசாதமாக கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு முக்கிய காரணம், அண்மையில் திருப்பதி லட்டு விவகாரமாகும். திருப்பதி லட்டில் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு கலந்துள்ளதா என்ற கேள்வி எழுந்தது. இதனால் பக்தர்கள் மத்தியில் பதட்டம் உருவாக, பல்வேறு கோயில்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த தடையை அறிவித்துள்ளன.
கோயில் நிர்வாகம் இந்த முடிவை எடுத்ததில் பக்தர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டாலும், பெரும்பாலானவர்கள் அதை ஆதரித்துள்ளனர்.