கோயம்புத்தூரில் உள்ள பீளமேட்டில் தமிழக அரசு சார்பில் டைடல் பார்க் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகின்ற 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.  இங்கு மொத்தம்  26 நிறுவனங்கள் வர இருக்கிறது. இதன் மூலம் சுமார் 14,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இரண்டாவது வளர்ச்சி நகரமாக இருப்பதால் ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களுக்கு கோவை டைடல் பார்க் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று கூறப்படுகிறது.

தற்போது கட்டப்பட்டு வரும் டைடல் பார்க்கின் முதல் 7 தளங்களில் இன்போசிஸ் நிறுவனம் இடம் பெறும். அதன் பிறகு 8 மற்றும் 9-வது தளங்களில் டெலாய்ட்டி இந்தியா நிறுவனமும், 10-வது தளத்தில் டெக் மகேந்திரா நிறுவனமும் இடம்பெற இருக்கிறது. மேலும் தற்போது இந்த ஐடி பார்க்கின் அருகில் காளப்பட்டியில் phase 2 பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் மொத்தம் 2 அடுக்குமாடி கட்டிடங்கள் வர இருக்கிறது. இதன் பணிகள் என்னும் ஓராண்டுக்குள் நிறைவடையும் என்று கூறப்படுவதால் இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.