அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விவகாரம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தொடர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு சம்மதம் தெரிவித்ததால் இன்று இறுதி தீர்ப்பு வருமா அல்லது இடைக்கால நிவாரணம் வழங்கப்படுமா அல்லது வழக்கு ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணை செய்ய இருக்கிறார்கள்.