தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் அண்ணாமலை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் தற்போதைக்கு கூட்டணி குறித்து எதுவும் கூற அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று கூறினார். இதனால் பாஜக அதிமுக கூட்டணியில் குழப்பம் இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு அண்ணாமலை பலே பிளான் ஒன்றை போட்டுள்ளாராம்.

அதாவது டெல்லியின் மனதை வெல்வதற்காக அண்ணாமலை பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி பாமக கட்சி, ஓபிஎஸ் அணி, தேமுதிக, புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், ஐஜேகே ஆகிய கட்சிகளை இணைத்து பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க அண்ணாமலை முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளாராம். மேலும் தற்போது அண்ணாமலை தனி ரூட்டில் செய்வதற்கு முடிவெடுத்துள்ள நிலையில் அவருடைய முயற்சி வெல்லுமா இல்லை தோல்வியில் முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.