
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மாவட்டம் அகோர்வா பவானி காலனியில் அரசு பள்ளி ஆசிரியரான சுனில் குமார் (35) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பூனம் (32) என்ற மனைவியும், திருஷ்டி (6), சுனி (1) என்ற இரண்டு மகள்களும் இருந்தனர். சுனில் குமாரின் குடும்பத்தினரை சந்தன் வர்மா என்பவர் சுட்டுக்கொலை செய்தார். அவரை போலீசார் அதிரடியாக என்கவுண்டர் செய்து கைது செய்தனர். சிறிய காயங்களுடன் சந்தன் வர்மா பிடிபட்டார்.
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தன் வர்மாவுக்கு சுனில் குமாரின் மனைவி பூனமுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது தெரிய வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே சண்டை வந்து பேசாமல் இருந்துள்ளனர். இது தொடர்பான வாக்குவாதம் முற்றியதால் கோபத்தில் சந்தன் வர்மா சுனில் குமாரின் குடும்பத்தினரையே கொலை செய்தது தெரியவந்தது.