சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோடையில் மின் தேவையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மதுபான கடைகளில் கூடுதலாக பணம் பெற்றுக் கொண்டு மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அபராதமும் விதிக்கப்படும்.

எந்த கடைகளில் கூடுதலாக பணம் பெற்று மதுபானம் விற்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு சொன்னால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் 500 மதுபான கடைகளை குறைப்பதற்கான கணக்கெடுப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மதுபான கடைகளில் கூடுதலாக பணம் பெற்று மது விற்பனை செய்ததில் 1977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 5.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சாராயம் பருகி 22 பேர் உயிரிழந்த சம்பவம் வருந்தத்தக்க விஷயம். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.