
தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (TASMAC) தமிழகத்தில் மது வகைகளை விற்பனை செய்யும் அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் மது வகைகளை சில்லறை அல்லது மொத்த வர்த்தகம் செய்ய உரிமை பெற்றுள்ள நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக்குகள் நடத்தப்படுகிறது. அரசு அதிக வருமானம் ஈட்டுகிற நிறுவனமாக டாஸ்மாக் உள்ளது. இந்த நிலையில் தற்போது டாஸ்மாக் நிறுவனம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் மது கடைகளில் மது பாட்டில்களில் குறிப்பிட்ட விலையை விட அதிகமாக மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
மது பாட்டில்களுக்கு ரூபாய் 10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்பது சட்டப்படி குற்றமாகும். மீறினால் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்கள் உடனே வேலை நிறுத்தம் செய்யப்படுவர் என கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் பணியாளர் நல சங்க தலைவர் மோகன்ராஜ் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் அவர் கூறியதாவது, டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 24,986 பணியாளர்கள் 18 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் டாஸ்மார்க் நிறுவனம் தற்போது வரை அவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை.
மேலும் டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாத வருமானம் மிகவும் குறைவாகவே வழங்கப்படுகிறது. அரசுக்கு அதிக வருவாயை கொடுக்கும் துறை ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவதில்லை. சமீபத்தில் டாஸ்மார்க் நிறுவனம் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை ஊழியர்களை உடனடியாக வேலைநிறுத்தம் செய்வது சட்டத்திற்கு எதிரானது. மேலும் இந்த அறிவிப்பை தடை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தார்.