ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி உலகப் போர்’ திரைப்படத்தின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் ஆதி, தற்போது போர் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

முன்னதாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஹிப்ஹாப் ஆதி தனது முந்தைய படமான ‘பிடி சார்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றியைப் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“>

 

போர் களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஹிப்ஹாப் ஆதி எப்படி நடித்துள்ளார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்தப் படம், ஹிப்ஹாப் ஆதியின் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.