
தமிழ்நாட்டில் 2023-24 ஆம் வருடத்துக்கான இளநிலை மருத்துவப் படிப்பு சீட் எண்ணிக்கையானது 11,275 ஆக அதிகரித்து இருக்கிறது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 4,935 இடங்கள் உள்ளன. கடந்த 2014 ஆம் வருடம் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 377 ஆக இருந்தது.
ஆனால் அது தற்போது 655 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த வருடம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் பயில்வார்கள் என்று கூறப்படுகிறது.