தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கோடைக்காலம் முழுவதும் தமிழகத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்தும் மண்டல பொறியாளர்களுக்கும் மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேதமடைந்த மின்கம்பங்கள், மின்மாற்றிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் மதுரை, திருச்சி, நெல்லை போன்ற பகுதிகளுக்கு தலா ரூ.20 லட்சமும் சென்னை, சேலம், கோவைக்கு தலா ரூ.15 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.