தமிழக அரசு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன் பதிவு செயலியை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிப்பொருள் விலை அதிகரிப்பால் தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வருமானம் இன்றி தவித்து வருவது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மாநகரங்களில் செல்போன் செயலி வாயிலாக தனியார் நிறுவனங்கள் ஆட்டோ ஓட்டுநர்களின் உழைப்பை சுரண்டுவதை கட்டுப்படுத்தாமல் அரசு வேடிக்கை பார்க்கிறது. எனவே கேரள அரசை போன்று தனியார் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசும் ஆட்டோ முன்பதிவு செயலிகளை உருவாக்கி குறைந்த கமிஷன் தொகையை மட்டுமே வசூலிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.