
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தமிழகப் போக்குவரத்து துறையில் செய்துள்ள சாதனைகள் குறித்த பட்டியல்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது. இதில் “மகளிர் விடியல் பயணத்திட்டம்”இதன் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூபாய் 888 வரை சேமித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை இந்தத் திட்டம் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 570.86 கோடி பயண நடைகள் தமிழக மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 57.67 லட்சம் மகளிர் இந்த இலவச பேருந்து பயணத்தை பயன்படுத்துகின்றனர்.
இதைத்தொடர்ந்து போக்குவரத்து துறையில் கடந்த மாதம் வரை 2,578 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாடுகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்து டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தொடர்ந்து பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.”சென்னை பஸ்”என்ற செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து whatsapp மூலம், இணையதளம் மூலம் போக்குவரத்து துறையில் ஏற்படும் நிறை குறைகளை உடனுக்குடன் சரி செய்வதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்தியா முழுவதிலும் வழங்கப்பட்ட விருதுகளில் 25 சதவிகிதம் போக்குவரத்து துறை சாதனைக்காக பெற்றுள்ளது. போக்குவரத்து துறையில் பணியாற்றிய போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு இதுவரை 755 பணியிடங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து துறையில் பல்வேறு சாதனைகள் மற்றும் சேவைகள் குறித்து மக்கள் பலரும் பாராட்டி வருவதாக இதில் கூறப்பட்டுள்ளது.