சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் அதன் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அரசுக்கு கேபிள் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. மேலும் மக்களிடமிருந்து பணத்தை சுரண்டுவதை மட்டுமே மத்திய அரசு வாடிக்கையாக வைத்துள்ளது என்றும் கூறினார்.