இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) T10 என்பது இந்தியாவின் முதல் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியாகும். இது 2024 ஆம் வருடம் மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

19 போட்டிகள் நடைபெறும் இந்த லீக்கில் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர், மும்பை மற்றும் ஸ்ரீநகர் என ஆறு அணிகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் சென்னை அணியின் உரிமைத்தை பிரபல நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.