முதியவர் ஒருவர் ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் என்ற பைக்கின் மேல் உட்கார்ந்து போஸ் கொடுக்கும் வீடியோவானது இப்போது இணையத்தளத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவில் பைக் ஓட்டும் ரைடர்கள் சில பேர் ஒரு குழுவாக கிராமத்தில் இருப்பதை காண முடிகிறது. சாதாரண பைக்குகள் மற்றும் கார்கள் கூட போக முடியாத மண்சாலை பாதைகள் வழியே அந்த குழுவினர் தங்களது சூப்பர் பைக்கில் சவாரி செய்தனர். நீண்டதூரம் சவாரி செய்தவர்கள் கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்தி இருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த முதியவர் அவர்களிடம் சென்று தான் இந்த பைக்கின் மேல் உட்கார்ந்து பார்க்கலாமா என கேட்டிருப்பது போன்று தோன்றுகிறது. இதையடுத்து அந்த முதியவர் சூப்பர் பைக்கின் மீது அழகாக அமர்ந்திருக்கிறார். பைக்கில் அமர்ந்த பின் முதியவர் சிரிப்பதை பார்க்கும்போதும் அவர் எவ்வளவு மகிழ்ச்சொயாக இருக்கிறார் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதோடு அந்த முதியவர் பைக்கில் அமர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram