
மெட்டா நிறுவனம் புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் மெசஞ்சரில் இருப்பது போலவே இன்ஸ்டாகிராமிலும் பயனர்கள் தங்களது லைவ் லொகேஷனை பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இன்ஸ்டாகிராமை மாதந்தோறும் மில்லியன் கணக்கான ஆக்டிவ் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நிறுவனம் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பயனர்கள் தங்களது லைவ் லொகேஷனை ஷேர் செய்யும் அம்சம் அறிமுகமாகியுள்ளது.
இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் டைரக்ட் மெசேஜ்களில் தங்களது இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளலாம். இந்த லொகேஷன் 60 நிமிடங்கள் வரை ஆக்டிவாக இருக்கும், ஆனால் வாட்ஸ்அப்பில் லைவ் லொகேஷன் 8 மணி நேரம் வரை ஆக்டிவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை ஒருவருக்கொருவர் குரூப்களுக்கு பகிர முடியும். ஆனால் ஷேர் செய்ய முடியாது. இது தொடர்பான இண்டிகேட்டர் ஒன்று டைரக்ட் மெசேஜ்களின் சாட் பாக்ஸில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் சில நாடுகளுக்கு மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.