ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழு விண்வெளியிலிருந்து திரும்பினர். விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால் மிதக்கும் நிலையிலேயே நீண்ட நாட்கள் இருந்து விட்டு பூமிக்கு திரும்பியதும் உடனடியாக எழுந்து நடக்க முடியாது.

இதனாலேயே விண்கலத்தில் இருந்து வெளியே வந்ததும் சுனிதா வில்லியம்ஸ் ஸ்ட்ரக்சனில் அழைத்து செல்லப்பட்டார். இவர் 9 மாதங்கள் விண்வெளியில் இருந்ததால் எலும்புகள் பலவீனம் ஆகிய நடப்பதற்கே அதிக வலியை தர வாய்ப்புண்டு. உடற்பயிற்சி மருத்துவ உதவிகளின் மூலம் பழைய நிலைக்கு விரைவில் திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.