
கர்நாடக மாநிலத்தில் 8 ஆண்டுகளாக இருவர் காதலித்து வந்த நிலையில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த 2007ஆம் ஆண்டு 21 வயது இளம்பெண் தற்கொலை செய்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் தாயார் காதலித்து ஏமாற்றிய இளைஞன் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பெயரில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில் நீதிமன்றம் வரை தண்டனை இல்லாமல் விடுவித்தது. இதனால் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்து வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டது. இதற்கு எதிராக தண்டனை வழங்கப்பட்ட இளைஞர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு பங்கஜ் மிட்டல் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் முழு விவரங்களையும் ஆராய்ந்து பார்த்த நீதிபதிகள் கூறியதாவது, காதலன் அந்தப் பெண்ணை உடல் ரீதியாக எந்த துன்புறுத்தலும் செய்யவில்லை, மேலும் தற்கொலைக்கு தூண்டியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை, இதனால் அந்த இளம் பெண் எடுத்த முடிவு அவரது உணர்ச்சி ரீதியாகவே நடைபெற்றுள்ளது. காதலில் பிரேக் அப் செய்ததற்கு தற்கொலை செய்து கொள்வது அவரவர் மனரீதியான முடிவுகள் ஆகும். எனவே காதலனை குற்றம் செய்ததாக கருத முடியாது எனக்கூறி 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.