நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கோடை வெப்பம் மிக கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நடப்பாண்டு குளிர்காலத்தில் கடுமையான உறைப்பனி சூழல் காணப்பட்டது. இந்த கடும் குளிர் ஒருபுறம் மக்களை வாட்டிய போதும் வருகின்ற கோடை காலம் மிகக் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய புவியியல் அமைச்சகத்தின் செயலாளர் ராஜி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது புவியியல் மாறுதல் காரணமாக வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடுமையான கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் என எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே நாட்டின் வடக்கு வடமேற்கு கிழக்கு பகுதிகளில் கடுமையான வெப்ப சூழல் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.