திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவல் சமீபத்தில் மாணவியின் கவுன்சிலிங் ஆலோசகரால் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் இரிஞ்சாலக்குடா பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவி யாரிடமும் தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லாமல் தனக்குள்ளே வைத்து மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த மாணவி கவுன்சிலிங் சென்றுள்ளார். அப்போது கவுன்சிலிங் ஆலோசகரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை பகிர்ந்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கவுன்சிலிங் ஆலோசகர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பின்னர், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.