நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் கூடலூர் செயின் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தமிழரசு தனிநபர் சிலம்ப போட்டியில் பங்கேற்றார். இந்நிலையில் அந்த மாணவர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

அந்த மாணவருக்கு கோப்பையும், மூவாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் தமிழரசு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில் சாதனை படைத்த மாணவரை பள்ளியின் தாளாளர் ஜோஜி ஓமன் பிலிப், தலைமையாசிரியர் டாக்டர் பிரான்சிஸ் சேவியர் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.