சென்னை ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியின் போது ஆளுநர் ரவி ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் 40 சதவீத காப்பர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதை வெளிநாட்டின் நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக கட்சியைச் சேர்ந்த கே.பி முனுசாமியும் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலையை அதிமுக அரசு மூடியது. ஆளுநர் ரவி இது போன்ற கருத்துக்களை கூறியது வேதனை அளிக்கிறது. உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு தலைவர் இது போன்ற கருத்துக்களை பொதுவெளியில் கூறுவது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.