இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற இருக்கிறது.

இந்த தகவலை தற்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஆர்டிசிபிஆர் பரிசோதனை நாள்தோறும் 11,000 என்ற எண்ணிக்கையில் உயர்த்தப்படுகிறது. அதன்பிறகு பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டால் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கொரானா கண்காணிப்பும் தீவிர படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.