நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாற்று சம்பவங்களை நினைத்துப் பார்க்கும்  முக்கியமான நேரம் இது. நாம் அனைவரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து விடை விடைபெறுகின்ற நேரம். ஒரு சமயத்தில் இந்த கட்டடம்இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்கான இடமாக   இருந்தது. நாம் இதை பாராளுமன்ற கட்டிடம் என்று சொல்லி வருகிறோம். இந்த கட்டிடத்தை உருவாக்கும் முடிவு வெளிநாட்டு ஆட்சியாளர்கள் உடையதாக இருந்தது.

புதிய பாடல் பாராளுமன்றத்தை கட்டியதில் வேர்வை சிந்தியவர்கள்  எங்களுடைய மக்கள். அதை அமைத்து உருவாக்கியவர்கள் பாரதத்தை சேர்ந்தவர்கள். இதற்கான செலவும் பாரத நாட்டினுடையது. இந்த பாராளுமன்ற கட்டிடத்தில் பல ஜனநாயக செயல்கள் நடைபெற்று இருக்கின்றன. பலர் இதிலேயே உயிர்த்துடிப்பாக கலந்து கொண்டிருக்கிறார்கள்.

சாட்சியாக இருக்கிறார்கள். இந்தக் கட்டிடமும் வருகின்ற சந்ததியினருக்கு ஒரு உற்சாகத்தை அளிக்கக் கூடிய வகையில் இருக்கும். இந்த பொன்மயமான வரலாற்று பயணத்தில் இந்த கட்டிடம் எப்படி செயல் பட்டது ? என்பதை உலகிற்கு காண்பிக்க வேண்டிய ஒரு நேரத்தில் நாம் இருக்கிறோம். நேரு,  வாஜ்பாய், மன்மோகன் சிங் இந்த நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என பேசினார்.