கூகுள் நிறுவனத்தில் வேலை இழந்த மென் பொறியாளர் பணி நீக்கத்தின் கடைசி நாள் நிகழ்வுகளை கண்ணீர் மல்க வீடியோவாக வெளியிட்டுள்ளது பார்ப்போரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிரபல முன்னணி நிறுவனமான கூகுள் சுமார் 12000 ஊழியர்களை அண்மையில் பணி நீக்கம் செய்தது. இதில் பாதிக்கப்பட்ட மென் பொறியாளரான நிக்கூலிசா என்பவர் பணி நீக்கதன்று நிகழ்ந்த நேரலைகளை கண்ணீர் மல்க tiktok வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார். காலையில் கண்விழித்ததும் தனது உயர் அதிகாரியிடம் இருந்து பணி நீக்க குறுஞ்செய்தி வந்ததாக அப்பெண் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து வழக்கமாக அவர் பயன்படுத்திய மடிக்கணினியின் அனுமதி மறுப்பு செய்தியும் பணி நீக்கத்தை உறுதிப்படுத்தியது. கனவு நிறுவனமான கூகுளிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் செய்வது அறியாது கண்ணீர் வடித்துள்ளார். கண்ணீருக்கு கனம் சேர்க்கும் விதமாக அவரது முன்னாள் சக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட தகவலை சமூக வலைதளம் மூலம் அப்பெண் அறிந்துள்ளார். கூகுளில் பணியாற்ற வேண்டும் என்பதே ஏராளமான மென்பொறியாளர்களின் கனவாகும். ஆனால் கூகுளில் இருந்தே பணி நீக்கம் செய்ததை கனவிலும் நம்ப முடியவில்லை என்ற வேலை இழந்த ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.