சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பசும்பொன் நகர் அம்பேத்கர் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சதீஷ்குமார்(28), வைத்தியநாதன்(25) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று ராமச்சந்திரனும், வைத்தியநாதனும் வெளியே சென்று விட்டனர். அப்போது வீட்டில் சதீஷ்குமாரும், சீதா தேவியும் இருந்துள்ளனர். இந்நிலையில் வைத்தியநாதன் வீட்டிற்கு திரும்பி வந்தபோது தனது தாய் தலை மற்றும் முகத்தில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது சதீஷ்குமார் தனது தாயை இரும்பு கம்பியால் தலை மற்றும் முகத்தில் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. இதனையடுத்து மாம்பாக்கம் பகுதியில் சுற்றித்திரிந்த சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.