தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் ஜெயம் ரவி என்ற பெயரை பெற்றார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து கோரிய நிலையில் அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அந்த சமயத்தில் ஜெயம் ரவி பாடகி கெனிஷா என்பவருடன் உறவில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஜெயம் ரவி “நாங்கள் இருவரும் நண்பர்கள் தான்” என்று கூறினார். அதோடு தன்னை இனிமேல் ரவி மோகன் என்று அழைக்கும் படி கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷின் மகள் திருமணம் இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சினிமா பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் இணைந்து இந்த திருமணத்திற்கு வந்திருந்தார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் ரவி மோகனும், பட்டுப்புடவையில் கெனிஷாவும் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மத்தியில் ரவி மோகன் 2து திருமணம் செய்து கொண்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.