
பாம்புகளை தெய்வமாக போற்றும் இந்தியாவின் பல்வேறு பக்தி வழிபாடுகளில் பீகார் மாநிலத்தின் பாம்பு திருவிழா தனிப்பட்ட இடம் பெற்றுள்ளது. இவ்விழா, நாக பஞ்சமியின்போது நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் மக்கள் தங்களின் கைகளில், கழுத்துகளில் பாம்புகளை வைத்துக் கொண்டே பக்தியோடு செய்யும் சம்பிரதாயம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
நகைச்சுவையாகவும் ஆச்சரியமாகவும் காணப்படும் இந்த விழாவின் சிறப்பு, பூசாரி ஆற்றில் மூழ்கி பாம்புகளை எடுத்து பமக்களை நோக்கி வீசுவார். அந்த பாம்புகளை மக்களும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் உடல்களில் சுமந்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது. மக்களின் நம்பிக்கையின்படி, பாம்புகளை வழிபடுவதால் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் வருமென்று நம்புகின்றனர்.
இந்த பாம்பு திருவிழா மக்களை மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது. பாம்புகளை வைத்து நடக்கும் பல போட்டிகளும் இதன் தனித்துவமான அம்சங்களாகும். இவ்விழாவில் பங்கேற்கும் மக்கள் பெரும்பாலும் பாம்புகளுடன் தினசரி வாழ்வில் பாசம் மற்றும் நம்பிக்கையை வளர்த்துள்ளனர்.
சமீபத்தில், இந்த பாம்பு திருவிழாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 11 வாரங்களுக்கு முன் பதிவிடப்பட்ட இந்த வீடியோ 5.25 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. இதன் மூலம் பாம்பு திருவிழா பற்றிய ஆர்வமும் அதிகரித்துள்ளது.