
இந்தியாவில் தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பல்வேறு விதமான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் முன்பதிவு செய்த ரயில் தற்போது எங்கு வருகிறது என எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மொபைல் எண்ணில் இருந்து 139 என்ற எண்ணுக்கு முதலில் spot என்று பதிவிட்டு ரயில் எண் குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் Locate என்று பதிவிட்டு ரயில் என்னை மீண்டும் எஸ்எம்எஸ் அனுப்பலாம். அப்படி அனுப்பினால் ரயில் வரும் இடம் குறித்து பதில் எஸ்எம்எஸ் வரும். இதை வைத்து ரயில் பயணத்திற்கு தயாராக முடியும்