
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் சிறந்த ஒரு நாள், டெஸ்ட், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவித்து வருகின்றது. அதோடு ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை 4 பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதன்படி இந்திய நட்சத்திர பேட்டர் ஸ்ருதி மந்தனா, இலங்கையின் சாமரி அட்டப்பட்டு, ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் மற்றும் தென்னாபிரிக்காவின் லாரா வால்வாட் ஆகியோர் இந்த விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டனர்
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக இந்திய வீராங்கனை ஸ்ருதி மந்தனா தேர்வு செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இவர் 2-வது முறையாக விருது பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இடது கை வீராங்கனை மனந்தனா 2024 ஆம் ஆண்டில் மட்டும் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் அடித்துள்ளார். இது ஒரு ஆண்டில் அவர் எடுத்த அதிகாரங்கள் ஆகும். அத்துடன் 2024-ம் ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் 4 சதங்களை அடித்துள்ளார் இது பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனையாகும்.