பிளிப்கார்டு குடியரசு தின விற்பனை (Flipkart Republic Day Sale) துவங்கி இருக்கிறது. ஜனவரி 15ம் தேதி துவங்கிய விற்பனை வரும் 20ம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் அதிகளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த சேலில் தாம்சனின் ஸ்மார்ட் டிவி மற்றும் வாஷிங் மெஷின் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் மிக மலிவான விலையில் வாங்கலாம். அதோடு இந்த சேலில் Blaupunkt தொலைக்காட்சிகளின் விலையும் கணிசமாக குறைத்து வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட் விற்பனையில் Blaupunkt TV-களில் 45 சதவீதம் வரை பிரத்யேக தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இது தவிர்த்து வாடிக்கையாளர்களில் ICICI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியை பெறலாம். Blaupunkt-ன் இந்த டிவி-ஐ ஃபிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை ஸ்பெஷலில் ரூபாய்.9,999 என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். இவ்விற்பனையில் Blaupunkt ரசிகர்கள் அண்மையில் கூகுள் டிவி மற்றும் பிற பொருட்களுடன் வெளியிடப்பட்ட QLED தொடர்களையும் பெறலாம்.

தாம்சங்கின் சிறந்த விற்பனையாகும் மாடல்களான 42PATH2121ஐ 14,999 ரூபாயிலும், 43PATH4545BLஐ 19,999 ரூபாயிலும், 50PATH1010BL BLஐ 24,999 ரூபாயிலும், 55 OP MAX9055ஐ 28,999 ரூபாயிலும், 75 OATHPRO2121ஐ 79,999 ரூபாயிலும் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட QLED மாடல் மற்றும் அதிகம் விற்பனையாகும் Q50H1000ஐ 31,999 ரூபாயிலும், Q55H1001-ஐ 37999 ரூபாயிலும் வாங்கலாம்.