
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சின்ஹார்ட் சாலை அமைந்துள்ளது. இங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் மிகவும் மோசமான நிலையில் கிடந்துள்ளார். இதில் லாலுளாய் கிராமத்தை சேர்ந்த அவர் அதிகாலை 4.30 மணிக்கு தனது வீட்டிலிருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வெகு நேரமாகியும் மகள் வீடு திரும்பாத காரணத்தினால் பெற்றோர் அவரை தேடி அலைந்துள்ளனர். அப்போது அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் வீட்டை விட்டு அதிகாலை வெளியே வந்த சிறுமி தனியாக இருப்பதை பார்த்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் சிறுமி இறந்து விட்டதாக நினைத்து அவளின் கை, கால்களை கட்டி சாலையில் வீசி சென்றுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.