டைரக்டர் வெங்கட் பிரபு தமிழில் பல வெற்றியை படங்களை கொடுத்துள்ளார். இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்திலிருந்து சினிமாவில் ஜொலித்து வரும் நிலையில், அதில் வெங்கட் பிரபுவும் ஒருவர் ஆவார். இப்போது இந்த குடும்பத்திலிருந்து மற்றொருவரும் சினிமாவில் நுழைத்து இருக்கிறார்.

அதாவது, வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி தான்  சினிமாவில் நுழைந்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் தெலுங்கு திரைப்படமான “கஸ்டடி” படத்திற்கு ஸ்ரீ ஷிவானி பாடலாசிரியராக மாறி உள்ளார். தெலுங்கு நடிகர் நாகசைதன்யா தான் இதில் ஹீரோவாக நடித்துள்ளார். ஸ்ரீஷிவானி எழுதிய பாடல் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.